பிரம்மாண்ட வாயில் என்றழைக்கப்பட்ட புலந்த் தர்வாஜா 17ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் அக்பரின் குஜராத் வெற்றியை நினைவு கொள்ளும் வகையில் கட்டப்பட்டது.
பிரம்மாண்டமான இந்த கல் கட்டிடம் பாரசீக-முகாலய கட்டிடக்கலைகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த 15மாடி உயர வாயில் ஃபதேபூர் சிக்ரியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் பாரசீக கல்வெட்டு 1601ல் அக்பரின் குஜராத் வெற்றியைக் குறிக்கிறது.
பாரசீகத்தில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு பலவகையான கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் ஏற்றுக்கொன்ட அக்பரின் பரந்த மனப்பான்மையைக் காண்பிப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அகலமான, பிரம்மாண்டமான மணற்கல் கட்டிடம் அனைத்து பக்கங்களிலும் கதவுகள் உடைய கூம்பைப் போல் காட்சி தருகிறது. ஏராளமான பயணிகள் இங்கு நிலவும் அமைதியையும், சுவரில் உள்ள அழகிய வேலைப்பாடுகளையும் ரசிக்க வருகை தருகிறார்கள்.
சிகப்பு மற்றும் மெருகு கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் வெள்ளை மற்றும் கருப்பு சலவைக் கற்களில் வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. சமச்சீரான வடிவில், அழகிய கொத்தளத்துடன், தூண்களாலும், சத்ரிக்களாலும் அழகூட்டப்பட்டதாக திகழ்கிறது.



Click it and Unblock the Notifications