ஐந்து மாடிகளுடன் பரந்து விரிந்த பாஞ்ச் மகால் ஓய்வு அரண்மனையாக அக்பரால் கட்டப்பட்டது. பொழுதுபோக்கவும் ,ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் அக்பர் இந்த அரண்மனையை பயன்படுத்தினார். திறந்தவெளி மைதானத்துடன் அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியும் முந்தைய மாடியை விட சிறியதாகவும் சீராக இல்லாத தூண்களால் தாங்கப்படும் வண்ணமும் அமைந்துள்ளது.
மேலும் அக்பரின் ராணிகளும், இளவரசிகளும் வலம்வரும் வண்ணம் பிரத்யேகமாக இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. மறைவான திரைச்சீலைகளுக்குப் பின் அமர்ந்து பெண்கள் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய தனித்துவம் வாய்ந்த நீர்த்தொட்டியான அனூப் தலாவிற்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.



Click it and Unblock the Notifications