இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ள இந்த நினைவகம் சட்லஜ் நதிக்கரையில் உள்ளது. பகத்சிங், சுக்தேவ் சிங், ராஜ்குரு சிங் ஆகியோரை தேதிக்கு முன்பே தூக்கிலிட்டு அவர்கள் உடல்களை இங்கே ஆங்கிலேயர்கள் எரித்தனர். பி.கே.தத் அவர்களின் உடலும் இங்கேயே எரியூட்டப்பட்டது.
1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிய வீரர்கள் இங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் ஜெயில் சிங்கின் உத்தரவின் பேரில் மீண்டும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு மார்ச் மாதமும் 23ஆம் நாள் ஷஹீதி மேளா என்ற விழா கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications