டைரக்டரேட் ஆஃப் ஹேண்டிகிராஃப்ட்ஸ் அன்ட் ஹேண்ட்லூம்ஸ் அல்லது DHH எனப்படும் இந்த அரசாங்க கைவினை மற்றும் நெசவுத்துறை மையம் மற்றும் விற்பனையகமானது ரசனை கொண்ட ஒவ்வொரு சுற்றுலா பயணியும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.
இந்த மையம் 1957ம் ஆண்டில் பாரம்பரியமான கைவினைப்பொருள் தயாரிப்புக்கலை மற்றும் கைத்தறி தொழிலை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு பயணிகள் கையால் நெய்யப்பட்ட போர்வைகள், சால்வைகள், தரை விரிப்புகள், மர கைவினைப்பொருட்கள் மற்றும் பல கலைப்பொருட்களை வாங்கலாம்.
DHH அமைப்பின் தலைமையகம் காங்க்டோக் நகரில் இருக்கின்ற போதிலும் இந்த அமைப்பின் 20 கிளை அங்காடிகள் சிக்கிங் மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டிருக்கிறது. இவை பயிற்சி மற்றும் உற்பத்தி மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.
DHH மையம் பொது மக்களுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 முதல் 4 மணி வரை திறக்கப்படுகிறது. விற்பனை வளாகம் வளாகம் வருடம் முழுதும் எல்லா நாட்களிலும் திறந்துள்ளது.



Click it and Unblock the Notifications