சிக்கிம் பகுதியில் மிக அமைதியுடன் காட்சியளிக்கும் பல வழிபாட்டுத்தலங்களுள் இந்த ஹனுமான் தோக் கோயிலும் ஒன்றாகும். ஹனுமானுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயில் காங்க்டாக் நகரத்திற்கு முன்னதாக 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் சக்தி வாய்ந்த கோயிலாக இது கருதப்படுகிறது.
மாசற்ற தூய்மையான சுற்றுப்புற சூழலின் நடுவே வீற்றிருக்கும் இந்த ஹனுமான் கோயில் இப்பகுதியில் பணியாற்றும் இந்திய ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தாரால் பராமரிக்கப்படுகிறது.
உள்ளூர் மக்கள் பெருமளவில் இக்கோயிலுக்கான காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு யாத்ரீகர்களுக்கான பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஹனுமான் தோக் கோயில் மலையுச்சியிலிருந்து மவுண்ட் கஞ்சன் ஜங்கா சிகரம், காங்க்டோக் நகரப்பகுதி மற்றும் லுக்ஷ்யாமா எனப்படும் ராஜ குடும்ப நினைவு வளாகம் போன்றவற்றை பயணிகள் நன்றாக பார்த்து மகிழலாம்.
லுக்ஷ்யாமா வளாகத்தில் இங்கு தகனம் செய்யப்பட்ட ராஜ குடும்பத்தினர்களின் நினைவாக பல அழகிய ஸ்தூபிகள் மற்றும் சோர்ட்டென்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications