சிக்கிம் மாநிலத்தின் நீளமான நதியான தீஸ்தா நதி வெள்ளை நீர் சவாரி செய்ய மிகவும் பொருத்தமான இடம். ரத்தோங் பனியாற்றிலிருந்து உற்பத்தியாகும் இந்த நதி எண்ணற்ற பாறைகளையும், குன்றுகளையும் தாண்டி வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது.
தீஸ்தா நதி கடந்து செல்லும் வழியெங்கும் அழகிய வெப்பமண்டல இலையுதிர் மரங்களையும், அல்ஃபைன் தாவரங்களையும் காணலாம். அதோடு தீஸ்தா நதியில் காற்று நிரப்பப்பட்ட படகுகளில் வெள்ளை நீர் சவாரி சென்று அஸ்ஸாமின் இயற்கையழகை கண்டு ரசிக்கும் அனுபவம் அற்புதமானது.
தீஸ்தா நதியின் பெரும் அலைகளில் கட்டுமரச் சவாரி செய்வது சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும். இங்கு தீஸ்தா பஜார் மற்றும் மெல்லி நகரம் ஆகிய பகுதிகளில் குழுவாக சேர்ந்து கட்டுமரச்சவாரி செய்ய முடியும். எனவே சீறிப்பாய்ந்து செல்லும் தீஸ்தா நதியின் குளிர்ச்சியான நீரில் பயணம் செய்வதை சாகசப்பிரியர்கள் தவறவிட்டுவிடக் கூடாது.



Click it and Unblock the Notifications