பழங்கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான தெளலானா கஜியாபாதில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ள மீரத்-ஹாபூர்-புலந்த்ஷார் சாலையில் உள்ள குலெளதியில் அமைந்துள்ளது.
உள்ளூர் கதைகளின்படி ராஜபுத்திர தலைவரான தெளல் சிங் என்பரால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வூர் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பின்னர் தாக்குதலுக்கு உள்ளாகி 1970ல் சீக்கியர்களால் கைப்பற்றப்பட்டது.
முதல் சுதந்திரப்போராட்ட போர் நடந்த 1857ல் இவ்வூர் தன் பங்களிப்பால் பெரும்புகழ் பெற்றது. அப்போரில் லாலா ஜன்குமால் என்பவரால் வழிநடத்தப்பட்ட ராஜபுத்திர மக்கள் 14பேர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்கள்.
இவ்வூரின் மக்கள் ஷஹீத் சமர்காஸ் என்ற நினைவுச் சின்னத்தைக் 1957ல் நூற்றாண்டை கொண்டாடும் வண்ணம் தியாகிகளின் நினைவாக கட்டினார்கள்.
இங்கிருக்கும் சதி மலிந்தி தேவி புகழ்பெற்று விளங்க்குகிறது. உள்ளூர் மக்களாலும், சுற்றியிருக்கும் மக்களாலும் இக்கோவில் மிகவும் போற்றப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இங்கு நடத்தப்படும் விழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications