ஊராட்சியான மோஹன் நகர் தொழிலதிபர் என்.என்.மோஹன் என்பவரால் 1958ல் அவர் பெயராலேயே உருவாக்கப்பட்டது. ஜிடி சாலையில் கஜியாபாதில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் மற்றொரு தொழில் நகரமஅன சஹியாபாதில் இருந்து 3கிமீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 16கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
செழித்தோங்கும் இந்த தொழில்நகரம் ஆரம்பத்தில் நொதி மற்றும் மாவுப்பொருள் பிரித்தல் தொழிற்சாலைக்கும், வடிப்பாலை மற்றும் வடிமனைக்காகவும் புகழ்பெற்று விளங்கியது.
பெரிய குளிர் கிடங்கும், ஐஸ்கட்டி தொழிற்சாலையும், குளிர்பான உற்பத்தி ஆலையும் இங்கு உள்ளன. இவ்வனைத்தும் நவீன உபகரணங்களைக் கொண்டு கட்டப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.
இவை மட்டுமல்லாது மேலும் பல தொழிற்சாலைகளும் இங்கு உண்டு. மோஹன் நகர் கோவில் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற கோவிலும் இங்கு உள்ளது



Click it and Unblock the Notifications