இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் மிகப் பெரிய பனியாறுகளில் கங்கோதரி பனியாறும் ஒன்று. இந்த பனியாறு 27 கியூபிக் கிமீ வரை பரவியிருக்கிறது. இதன் நீளம் 30 கிமீ ஆகும்.
இதன் அகலம் 4 கிமீ ஆகும். இந்த ஆறு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பனியாற்றை சுற்றி ஷிவ்லிங், தலாய் சாகர் மேரு மற்றும் பகிரதி III போன்ற மலைச் சிகரங்கள் அமைந்திருக்கின்றன.
சக்கும்பா மலைச் சிகரத்திலிருந்து ஒரு வட்டமாக புறப்படும் இந்த பனியாறு வடகிழக்குத் திசையில் பாய்ந்து இறுதியில் அதன் வடிவத்தை இழந்து கோமுக்கில் ஒரு பசுவின் வாய் வடிவில் செல்கிறது. இந்த உறைய வைக்கும் பனியாற்றில் குளிப்பதை இந்துக்கள் ஒரு சமயச் சடங்காகக் கருதுகின்றனர்.



Click it and Unblock the Notifications