துர்கா தேவியை வழிபடுவதற்காக கட்டப்பட்ட கோவில் ஜாய் துர்கா கோவில். 1774- ஆம் ஆண்டு, லக்ஷ்மிநாத் சிங்க அரசர் என்பவரால் கட்டப்பட்ட இக்கோவிலில், கல்லால் ஆன அழகிய துர்கா சிலை ஒன்று உள்ளது. அஹோம் சாம்ராஜ்யத்தின் அப்போதைய அரசராக இருந்தவர் லக்ஷ்மிநாத் சிங்கா ஆவார்.
துர்கா தேவி மிகவும் கோபம் கொண்ட ஒரு அவதாரமாக இருந்தாலும், இந்துக்கள் மத்தியில் அன்பான, கருணை உள்ளம் கொண்ட கடவுளாக காட்சியளிக்கிறார். துர்கா தேவியின் வீரம் மற்றும் தீமைகளை அழித்த விதம் குறித்து பல கதைகள் உள்ளன.
கோவில் மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகள் போன்ற அனைத்துமே மிக அழகாக காட்சியளிக்கிறது. இக்கோவிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து, பல மணிநேரம் இயற்கை அழகை ரசிக்கின்றனர் பக்தர்கள்.
ஹாஜோ சிறிய நகரம் என்பதால், இவ்விடத்திற்கு வெகு விரைவில் வந்து செல்ல முடியும். சுற்றுலாப் பயணிகள், அவசியம் பார்க்க வேண்டிய கோவில் ஜாய் துர்கா தேவி கோவில்.



Click it and Unblock the Notifications