ஹலேபீடுக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் அவசியம் இந்த பேலவாடி எனும் வரலாற்றுத்தலத்துக்கு சென்று பார்ப்பது நல்லது. இந்த தேசிய பண்பாட்டு ஸ்தலமானது அதன் எழில் கொஞ்சும் இருப்பிடம் மற்றும் பசுமையான சூழல், உயர்ந்த மரங்கள் போன்றவற்றுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது.
ஜவகல் - சிக்மகளூர் சாலையில் அமைந்துள்ள இந்த கிராமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்சமயம் பழைய பேலவாடி கிராமம் காலியாகவும், புது பேலவாடி பகுதி மக்கள் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது.இந்த கிராமத்தில் ஹொய்சள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள வீரநாராயணர் கோயில் உள்ளது. மூன்று கோபுரங்களை கொண்ட திரிகூட பாணி கோயிலாக இது அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஷீ வீரநாராயணர், ஷீ வேணுகோபாலர், ஷீ யோகநரசிம்மர் போன்றோரது சிலைகள் முறையே கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் அமைந்துள்ளன.
மேலும் இந்த கிராமத்தில் மராத்திய மன்னர் சிவாஜியை எதிர்த்து 17ம் நூற்றாண்டில் போரிட்ட பேலவாடி மல்லம்மா எனும் வீர ராணியின் வரலாறும் பிரசித்தமாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications