Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » தண்ணீர்ப்பாதைகளும் கால்வாய்களும்

தண்ணீர்ப்பாதைகளும் கால்வாய்களும், ஹம்பி

84

அரண்மனைகள், கோயில்கள், நீர் தடாகங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றின் நீர் தேவைக்காக ஹம்பி பகுதியில் பல கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ராயா கால்வாய் (ராஜ வாய்க்கால்) துர்த்து கால்வாய் (விரைவு வாய்க்கால்), கமாலபுரம் குளம், பசவன்னா கால்வாய் போன்றவை விஜயநகர மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

 

அவற்றில் சில கால்வாய்கள் குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியில் ஓடும் கால்வாய்கள் இன்றும் விவசாய பாசனத்துக்கு பயன்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

வரலாற்று காலத்தில் நீர் பாசன வசதிகளும் அது தொடர்பான தொழில் நுட்பங்களும் எந்த நிலையில் சிறந்திருந்தன என்றும் எப்படியெல்லாம் கட்டிடக்கலை வல்லுனர்களும், நகர வடிவமைப்பாளர்களும் இதற்காக திட்டங்களை தீட்டியிருந்தனர் என்றும்  அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் இந்த கால்வாய்களையும் நீர்வழிப் பாதைகளையும் பார்க்க வேண்டும்.

தொன்று தொட்டு வழங்கி வரும் நாட்டார் கதையின்படி ராம பஹவான் தனது தந்தைக்கான ஈமச்சடங்கை இங்குள்ள துர்த்து கால்வாயில் முடித்த தாக நம்பப்படுகிறது. ஹம்பியிலிருந்து கமலாபுரம் செல்லும் வழியில் உள்ள லட்சுமி நரசிம்மர் சிலைக்கு அருகில் இந்த கால்வாய் உள்ளது.

எண்ணற்ற நீர்வழிப்பாதைகள் பாறைகளால் அமைக்கப்பட்டு அரண்மனையின் பல பகுதிகளையும் இணைத்திருப்பதை நாம் ஹம்பியில் காணலாம். எல்லா நீர்வழி பாதைகளும் சுற்றியுள்ள 20 குளங்களுடனும் கிணறுகளுடனும் இணைக்கப்பட்டு காணப்படுகின்றன.

இவற்றில் பல நீர்வழி பாதைகள் சிதைந்திருந்தாலும் புராதன காலத்தின் நீர்த்தேவை திட்டங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு கண்கூடாக தெரியும் இந்த நீர்வழிப்பாதைகள் உதவுகின்றன. குறிப்பாக ஹம்பியில் விருப்பாபூர் கட்டே என்ற இடத்தில் உள்ள பெரிய நீர்வழிப் பாலம் அவசியம் பார்க்க வேன்டிய ஒன்றாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu