Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » விட்டலா கோயில்

விட்டலா கோயில், ஹம்பி

84

விஷ்ணு பஹவானுக்கான விட்டலா கோயில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஆலயமாகும். ஹம்பிக்கு வரும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இந்த கோயிலில் வேறு எங்குமே பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமான, வெகு நுட்பமாக சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பி காணப்படுகின்றன. துங்கபத்திரை ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள இந்த கோயில் தென்னிந்திய திராவிட கட்டிடக்கலை பாணியில் வேறெந்த கட்டிடக்கலை அம்சமும் கலந்திடாமல் கட்டப்பட்டுள்ளது.

விஜயநகர அரசரான இரண்டாம் தேவராயரின் காலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் விஜயநகர வம்சத்தின் முக்கிய கலைச்சின்னமாக கருதப்படுகிறது.பார்த்தவுடனேயே பிரமிக்க வைக்கும் அலங்கார சிற்ப தூண்களையும் வெகு நுட்பமான சிற்பச் செதுக்கு வேலைப்பாட்டையும் இந்த கோயில் கொண்டுள்ளது.

இங்குள்ள ரங்க மண்டபத்தில் 56 இசைத் தூண்கள் உள்ளன. இந்த தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டும்போது ஒவ்வொரு விதமான இசை ஒலி எழும்புவதைக் காணலாம். இந்த இசைத் தூண்கள் பயணிகளை வியப்பிலும் பரவசத்திலும் ஆழ்த்துகின்றன.

இந்த கோயிலில் விக்கிரகங்கள் கருவறையில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவறையில் தலைமைப் குருக்கள் மட்டுமே நுழைய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் விக்கிரக அலங்காரங்களை பிரகாரத்திலிருந்து தரிசிக்க ஏற்ற வகையில் கருவறை திறந்து காண்பிக்கப்படுகிறது.

இந்த கோயிலின் முற்றத்தில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு கல் தேர் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தின் கிழக்கு பகுதியில் இந்த தேர் உள்ளது. ஒரு சிறிய கோயில் போன்றே பல நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்த கல் தேர் செதுக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் சக்கரங்களும் கல்லால் ஆனவை என்பது மட்டுமல்லாமல் இந்த சக்கரங்கள் ஒட்டுமொத்த கல் தேரின் எடையையும் தாங்கியபடி நகரவும் கூடியவை என்பது ஒரு மாபெரும் தொழில் நுட்ப அதிசயம் என்றால் அது மிகையில்லை.

இது தவிர பல பீடங்களும், சிறு கோயில்களும், மண்டபங்களும் விட்டலா கோயில் வளாகத்தில் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed