அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் ரம்மியமாக வீற்றிருக்கும் இந்த பெண்ணாகரம் எனும் எழில் கிராமம் ஹொகனேக்கல் சுற்றுலாப்பகுதியின் நுழைவாயிலாக அமைந்துள்ளது.
இந்த கிராமத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ஹொகனேக்கல் உள்ளது. பட்டுப்பூச்சிகளுக்கான மல்பெரி தோட்டங்கள், வண்ணங்கள் பூசப்பட்ட பிரம்மாண்ட ஐய்யனார் சிலைகள் என்று பல சுவாரசிய அம்சங்கள் இந்த கிராமத்தில் காணக்கிடைக்கின்றன.
ஊர் காக்கும் காவல் தெய்வங்களாக ஐய்யனாரை மக்கள் வணங்குவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பெண்ணாகரத்தில் கோலாகலமான வாரச்சந்தை ஒன்றும் கூடுகிறது.



Click it and Unblock the Notifications