Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடுக்கி » ஈர்க்கும் இடங்கள் » குறிஞ்சிமலா சரணாலயம்

குறிஞ்சிமலா சரணாலயம், இடுக்கி

35

குறிஞ்சிமலா சரணாலயம் பலவிதமான காட்டுயிர் அம்சங்களும் தாவரங்களும் நிறைந்த செழிப்பான வனப்பகுதியாகும். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம் தாலுக்காவில் வட்டவடா மற்றும் கொட்டகாம்பூர் கிராமங்களை ஒட்டி இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

32 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இது அழிந்து வரும் தாவர வகையான நீலக்குறிஞ்சி காணப்படும் வனப்பகுதியாகும்.2006ம் ஆண்டில் நடைபெற்ற நீலக்குறிஞ்சி திருவிழாவின் போது இந்த வனப்பகுதியானது சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருந்த அவ்வருடத்தில் சுமார் 10 லட்சம் பார்வையாளர்கள் முன்னார் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு இம்மலர்களை பார்ப்பதற்காகவே விஜயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு தகவலாகும்.

பல்லுயிர்ச்சூழலுக்கான இயல்பைக் கொண்டுள்ள இந்த சரணாலயத்தில் யானைகள், வரையாடு, காட்டெருமை மற்றும் மான் ஆகிய விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியின் பெயர் அடையாளமான நீலக்குறிஞ்சி இங்கு அதிக அளவில் காணப்படும் சிறப்புத்தாவரமாகும்.

மேலும், சின்னார் காட்டுயிர் சரணாலயம் மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இங்கு அருகிலேயே அமைந்துள்ளன. இவற்றைத்தவிர, இரவிக்குளம் தேசியப்பூங்கா, பாம்பாடும் சோலை தேசியப்பூங்கா மற்றும் ஆனமுடி சோலை தேசியப்பூங்கா போன்ற இதர தேசியப்பூங்காக்களும் இதனை ஒட்டியே காணப்படுகின்றன. தற்போது உருவாகிவரும் பழனி மலை தேசியப்பூங்கா குறிஞ்சிமலா சரணாலயத்திற்கு கிழக்குத்திசையில் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed