பைனாவு, இடுக்கி

இடுக்கி பகுதியின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த பைனாவு ஆகும். இடுக்கி மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ள இந்த நகரம் முக்கியமான வியாபாரக்கேந்திரமாக அறியப்படுகிறது.

இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணை ஆகிய இரண்டு முக்கியமான அணைப்பகுதிகளும் இந்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்திலேயே உள்ளன. இனிமையான சூழல் மற்றும் ரம்மியமான இயற்கை எழில் போன்றவற்றுக்கு இந்த பைனாவு பிரசித்தி பெற்றுள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு நகரம் இயற்கையோடு இயைந்த பசுமைப்பின்னணியோடு காட்சியளிக்கிறது.

இங்குள்ள காடுகளில் மலையேற்றப் பயணத்தில் ஈடுபட வெகுதூரங்களிலிருந்தும் சாகசப்பயணிகள் வருகை தருகின்றனர். மழைக்காலம் முடிந்தபின்னர் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்நகருக்கு விஜயம் செய்வது சிறந்தது.

Please Wait while comments are loading...