தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம், இடுக்கி

முகப்பு » சேரும் இடங்கள் » இடுக்கி » ஈர்க்கும் இடங்கள் » தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம்

தொடுப்புழா நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலுள்ள தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம் எனும் இந்த இடத்துக்கு பயணப்பதே ஒரு அற்புதமான அனுபவமாகும். இது தொடுபுழா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும்.

இயற்கை அழகை ரசிப்பதில் தனி ஆர்வம் கொண்ட ரசிகர்கள் மறக்காமல் இந்த தும்பாச்சிக்கு விஜயம் செய்வது நல்லது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிக்னிக் சிற்றுலாவாக சென்று மகிழ இந்த இடம் மிகவும் ஏற்றது.

இங்கு கவிழ்ந்திருக்கும் இயற்கைச்சூழலில் தியானம் மற்றும் ஓய்வு போன்றவற்றை அனுபவிப்பது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சுற்றிலுமுள்ள ரம்மியமான சூழலை ரசித்தப்படியே இங்கு நீண்ட நடைப்பயண சென்று மகிழலாம். இரவுத்தங்கலுக்கு வசதியாக நல்ல விடுதிகளும் அருகிலேயே இந்நகரத்தில் உள்ளன.

Please Wait while comments are loading...