பாட்ஸா ஆற்றுப்பள்ளத்தாக்கிற்கு அருகிலேயே இந்த ஒட்டகப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இகத்புரிக்கு வருகை தரும் பயணிகளை பெரிதும் கவர்ந்து வசீகரிக்கும் ஒரு ரம்யமான நீர்வீழ்ச்சி ஒன்று இந்த பள்ளத்தாக்கில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகின்றது என்பது ஓரு பிரமிக்கவைக்கும் அம்சமாகும்.
இந்த பள்ளத்தாக்கின் அழகை நன்றாக ரசிப்பதற்கு மழைக்காலமே மிகப்பொருத்தமாக இருக்கும். நிரம்பி வழியும் அருவியும் பசுமை போர்த்திய தூய்மையான பள்ளத்தாக்கு பகுதியும் அப்போது நம் கண்களுக்கு விருந்தாய் காட்சியளிக்கின்றன.
சாகசத்தை விரும்பும் பயணிகளுக்கு பரிசல் சவாரி, ஆற்றுப்பயணம் போன்றவை இங்கு காத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications