இகத்புரியில் பல ஏரிகள் இருந்தாலும் இந்த திரிங்கால்வாடி ஏரி பிரசித்தமான ஏரியாக அறியப்படுகிறது. இது தற்சமயம் இகாத்புரி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மாலை நேரத்தை குடும்பம், குழந்தைகளுடன் ஓய்வாகவும் உல்லாசமாகவும் கழிக்க ஏற்ற இடமாக இந்த ஏரி உள்ளது.இந்த ஏரிக்கருகில் பிரமிக்க வைக்கும் புராதன கோட்டைகளும் உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளும் ரம்மியமாய் காட்சியளிக்கின்றன.மழைக்காலத்தில் இந்த ஏரி முழுக்க நிரம்பி பசுமையான சுற்றுப்புறச்சூழலுடன் காட்சியளிக்கும் என்பதால் அக்காலத்தில் இங்கு வருகை தருவது நல்ல அனுபவமாக இருக்கும். வித்தியாசமான பறவைகளைப்பார்ப்பதற்கும், ஏரிக்கரையில் உள்ள நடைப்பாதைகளில் ஓய்வாக நடப்பதற்கும் இந்த இடம் மிகவும் உகந்தது.



Click it and Unblock the Notifications