வைதர்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த வைதர்ணா அணையிலிருந்து கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அழகை நன்றாக ரசிக்க முடிகிறது. இகத்புரி பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த அணை 1950 ம் ஆண்டில் கட்டப்பட்டு அதற்குப்பின் இந்தியாவில் கட்டப்பட்ட எல்லா கான்கிரீட் அணைகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கியுள்ளது.
இந்த அணைப்பகுதியில் இருக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கம் இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. இந்த உப்பங்கழி ஓடைகள் பார்த்து ரசிப்பதற்கேற்றபடி அழகாக உள்ளன. இந்த அணை நீர்த்தேக்கம் மும்பை நீர்த்தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக உள்ளதென்பது அதிகம் அறியப்படாத ஒரு தகவல் ஆகும்.



Click it and Unblock the Notifications