காங்லா அரண்மனை, இம்பால்

காங்லா, மணிப்புரின் பெருமைமிகு அரண்மனையாக 17-ம் நூற்றாண்டிலிருந்து உறுதியாக நின்று கொண்டிருக்கிறது. மெய்ட்டி மொழியில் 'காங்லா' என்ற பெயருக்கு 'வறண்ட இடம்' என்று பொருளாகும்.

இம்பால் நதிக்கரையில் உள்ள காங்லா அரண்மனையை பொதுவாகவே காங்லா கோட்டை என்று அழைப்பதால், இம்பால் ஒரு கோட்டை நகரமாகவே சொல்லப்படுகிறது.

பெருமளவு சிதைந்த நிலையிலிருந்தாலும், இந்த கோட்டை அரசியல் மற்றும் மத முக்கியத்துவம் பெற்றிருந்ததை எளிதில் அறிந்து கொள்ள முடியும். காங்லா அரண்மனை மணிப்பூரை ஆண்டு வந்த மெய்ட்டி அரசர்களுடைய இடமாக இருந்தது.

1632-ம் ஆண்டுகளில் இங்கிருக்கும் அற்புதமான செங்கற் சுவர்கள் கடுமையான சிறைச்சாலையாக செயல்பட்ட போது, சீனவைச் சேர்ந்தவர்கள் பிடிக்கப்பட்டு, இந்த சிறையில் வைக்கப் பட்டிருந்தனர்.

1891-ம் ஆண்டு நடந்த ஆங்கிலோ-மணிப்பூர் போரில் மணிப்பூர் அரசர் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த கோட்டை பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், சுதந்திரத்திற்குப் பிறகும் கூட 2004-ம் ஆண்டு வரை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரிடம் இருந்த இந்த கோட்டை, பிறகு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Please Wait while comments are loading...