» »இந்தியாவின் முதல் கயிறு வழி போக்குவரத்து எங்கே தெரியுமா?

இந்தியாவின் முதல் கயிறு வழி போக்குவரத்து எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியாவின் வணிக மையம் என்றால் அது மும்பை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு பல்வேறு அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நடந்துள்ளன.

உலகின் மிகப்பழமையான வரலாற்று நிகழ்வுகளும் இம்மாநிலத்தில் நடந்துள்ளன. இந்திய சினிமாவின் ஒரு பகுதியே இதைச் சுற்றித்தான் நடந்து வருகிறது என்பதும் இவ்வூருக்கு பெருமையளிக்கும் அம்சமாகும்.

இப்படிபட்ட மும்பையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கயிற்றுவழி போக்குவரத்து. அதுதாங்க ரோப்கார் போக்குவரத்து. இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்வோம் வாங்க.

எவ்வளவு நீளம்

எவ்வளவு நீளம்


இந்த கயிற்றுவழி போக்குவரத்து சுமார் 8 கிமீ நீளமுடையது. இதுதான் இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து என்று அறியப்படுகிறது.

wiki.commons

எங்கிருந்து எங்கு வரை

எங்கிருந்து எங்கு வரை

இந்த கயிற்று போக்குவரத்து மும்பை நகரிலிருந்து எலிபாண்டா தீவு வரை நீளவிருக்கிறது.

wiki.commons

எலிபாண்டா குகை எங்குள்ளது

எலிபாண்டா குகை எங்குள்ளது


மும்பை மற்றும் நவி மும்பை அருகே அமைந்துள்ள ஒரு தீவில் இந்த எலிபாண்டா குகை அமைந்துள்ளது.

பயணம் தொடக்கம்

பயணம் தொடக்கம்


இந்த கயிற்று பயணம் மும்பையின் மிக முக்கியமான துறைமுகமான செவாரி கோட்டையிலிருந்து தொடங்கும்.

முடிவு

முடிவு

இந்த கயிற்று பயணம் மறுபுறமுள்ள ராய்காட் மாவட்ட துறைமுகத்தில் முடிவடையும்.

பயணநேரம்

பயணநேரம்

இந்த பயணநேரம் அதிகபட்சம் 40 நிமிடங்களில் முடிவடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கொள்ளளவு

கொள்ளளவு


ஒவ்வொரு கேபிள்காரும் அதிகபட்சம் 20 பேர் வரை சுமந்து செல்லும் என்றும் தெரிகிறது.

வசதிகளுடன் முனையம்

வசதிகளுடன் முனையம்

இந்த கயிற்றுப் பயணத்தின் முனையமானது தொங்கும் விடுதி, பொழுதுபோக்கு அம்சங்கள் பல நிறைந்ததாக இருக்கும்.

Ricardo Martins

எலிபாண்டா குகைகள்

எலிபாண்டா குகைகள்

இது யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.

தற்போது இந்த எலிபாண்டா குகைக்கு 1 மணி நேர பயணத்தில் அடையலாம்.

AKS.9955

எப்போது கட்டப்பட்டவை இவை?

எப்போது கட்டப்பட்டவை இவை?


கி.பி 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 8ஆம் நூற்றாண்டிற்குள் இவை கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவற்றை யார் கட்டினார்கள் என்பதற்கு இன்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

கிரஹ புரி

கிரஹ புரி

இவ்விடம் முதலில் கிரஹ புரி என்று அழைக்கப்பட்டதாகவும் ஹிந்துக்களின் வழிபாட்டு தலமாகவும் 16ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1534இல் போர்த்துகீசியர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்த பிறகு அவை வழக்கொழிந்து போய் இருக்கின்றன

Andy Hay

பாண்டவர்கள்

பாண்டவர்கள்

இங்குள்ள நாட்டுப்புரக்கதைகளின் படி மகாபாரத யுத்தத்தில் வென்ற பாண்டவர்கள் இக்கோயிலை கட்டியதாக சொல்கின்றனர்.

Ricardo Martins

திருமூர்த்தி சிற்பம்

திருமூர்த்தி சிற்பம்


இந்த எளிபென்ட்டா குகை சிற்பங்களில் மிகச்சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுவது சிவகுகையின் வாயிலுக்கு பின்னே இருக்கும் திருமூர்த்தி சிற்பம் ஆகும்.

Christian Haugen

மூன்று தொழில்

மூன்று தொழில்

20 அடி உயரம் கொண்ட இது சிவனின் மூன்று தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்பதை விளக்கும் விதமாக 3 முகங்களுடன் உள்ளன.

Ricardo Martins

வண்ணம் தீட்ட

வண்ணம் தீட்ட

திருமூர்த்தி சிற்பம் உட்பட இங்குள்ள அனைத்து சிற்பங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததாகவும் காலப்போக்கில் அவை அழிந்து பொய் இருக்கின்றன.

ஷாப்பிங்?

ஷாப்பிங்?

ஒரு குட்டித்தீவில் என்ன கிடக்கும் என நீங்கள் நினைத்தால் உங்கள் நினைப்பை பொய்யாக்கும் வகையில் இங்கே இருக்கும் சந்தையில் நாம் வாங்கிச்செல்ல ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன.

எங்கு சாப்பிடலாம்?

எங்கு சாப்பிடலாம்?

மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை நடத்தும் உணவகம் இந்த தீவில் இருக்கிறது. நியாமான விலையில் இந்திய உணவு வகைகள் இங்கே கிடைக்கின்றன. இது தவிர காட்டுப்பழங்கள், தேநீர் போன்றவற்றை குகைகளுக்கு பக்கத்தில் நாம் வாங்கலாம்

படகு

படகு

இந்த தீவை படகு மூலம் மட்டுமே அடைய முடியும். மும்பையில் உள்ள 'கேட் வே ஆப் இந்தியா'வில் இருந்து காலை 9 மணிக்கு தீவுக்கு முதல் படகு கிளம்புகிறது. திரும்பி வர மாலை 5 மணி வரை படகு சேவை உள்ளது.

ரயில்

ரயில்


இந்தியாவின் எல்லா நகரங்களில் இருந்தும் மும்பைக்கு ரயில் மற்றும் பஸ் சேவைகள் உள்ளன.

Read more about: travel, cave