Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இட்டாநகர் » ஈர்க்கும் இடங்கள் » இட்டாநகர் பூங்காக்கள்

இட்டாநகர் பூங்காக்கள், இட்டாநகர்

51

பன்முகத்தன்மை கொண்ட பருவநிலையை கொண்டிருப்பதால் அருணாச்சலபிரதேசத்தில் தாவர வளர்ச்சி அபரிமிதமாக காணப்படுகிறது. வெப்பமண்டல மற்றும் உபவெப்பமண்டல இயல்பைகொண்டுள்ள பசுமைமாறாக்காடுகள் இப்பகுதியில் நிரம்பியுள்ளன. 

எனவே இவற்றில் தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகள் போன்றவை அதிக அளவில் வசிக்கின்றன. இந்த காடுகள், சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள் மட்டுமல்லாமல் அழகிய பூங்காக்களும் அதிகமாக இம்மாநிலத்தில் காணப்படுகின்றன.

இவை பொழுதுபோக்கிற்காகவும், சுற்றுலாப்பயணிகளை மகிழ்வூட்டும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையை ரசித்தபடி ஓய்வாக பொழுது போக்க விரும்பும் பயணிகள் இந்த பூங்காக்களுக்கு விஜயம் செய்யலாம்.

இந்திரா காந்தி பூங்கா இட்டாநகரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பூங்காவாகும். இது தவிர போலோ பார்க் என்பது ஒரு சிறிய தாவரவியல் பூங்காவாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இது ஈடாநகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் ஒரு மலைமீது அமைக்கப்பட்டிருக்கிறது. இமயமலை அடிவாரப்பகுதியில் அமைந்திருப்பதால் இப்பகுதி வருடம் முழுதும் நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. எனவே இந்த பூங்கா முழுவதும் பசுமை நிரம்பிய வளத்துடன் காட்சியளிக்கிறது.

பபும்பரே மாவட்டத்தில் உள்ள சிம்பு ஜுவாலஜிகல் பார்க் மற்றொரு முக்கியமான பூங்காவாகும். அடர்ந்த தாவரச்செழிப்பை கொண்டுள்ள இந்த பூங்காவிற்கு ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர்.

பலவிதமான பறவை வகைகளும் இந்த பூங்காவில் வசிப்பதால் பறவை ஆர்வலர்களுக்கு பிடித்தமான பூங்காவாகவும் இது புகழ் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri