Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இட்டாநகர் » ஈர்க்கும் இடங்கள் » இட்டா ஃபோர்ட்

இட்டா ஃபோர்ட், இட்டாநகர்

51

இட்டாநகர் பல்வேறு தொல்லியல் ஸ்தலங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. இட்டா ஃபோர்ட் (செங்கல் கோட்டை) என்று அழைக்கப்படும் பழமையான கோட்டை ஒன்று இந்நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

இட்டாநகர் என்ற பெயர் எற்படுவதற்கு இந்த கோட்டையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு ஒழுங்கற்ற வடிவமைப்போடு கூடிய உயரமான சுவர்கள் இந்த கோட்டைஸ்தலத்தில் அமைந்துள்ளன.

நகரத்தின் மையப்பகுதியிலேயே காணப்படும் இந்த கோட்டை 14-15ம் நூற்றாண்டுகளுக்கு உரியதாக கருதப்படுகிறது. 16,200 கன மீட்டர் நீளத்திற்கு இதில் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஒரு சில வரலாற்றாசிரியர்கள் இந்த கற்கோட்டை மாயாபூரை ஆண்ட ராமச்சாந்திரா எனும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இவர் இப்பகுதியை ஆண்ட ஜிதாரி வம்சத்தை சேர்ந்த மன்னராவார்.

80 லட்சத்திற்கும் அதிகமான கற்கள் இந்த வரலாற்றுக்கோட்டையை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல நூற்றாண்டுகள் கடந்தும் இந்த கோட்டைச்சுவர்கள் கம்பீரத்துடன் வீற்றிருப்பது ஒரு அதிசயமாக ரசிக்கப்படுகிறது.

இட்டா எனும் சொல்லுக்கு அஹோம் மொழியில் செங்கல் என்பது பொருளாகும். எனவேதான் இது இட்டா கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

மேற்கு, கிழக்கு மற்றும் தெற்குப்பகுதி வாசல்கள் வழியாக பார்வையாளர்கள் இந்த கோட்டை வளாகத்துள் நுழையலாம். இந்த ஸ்தலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட சில புராதன வரலாற்றுப்பொருட்கள் ஈடாநகர் ஜவஹர்லால் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun