இந்துக்கடவுளான காளி மாதாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஷீலா தேவி கோயில் ஆம்பேர் கோட்டைக்குள் அமைந்துள்ளது. காளி தேவியின் தீவிர பக்தரான ராஜா மான் சிங் இங்குள்ள விக்கிரகத்தை 16ம் நூற்றாண்டில் வங்க தேசத்திலிருந்து கொண்டு வந்துள்ளார்.
ஷீலா தேவி கோயில் அழகிய வெண்பளிங்கு கற்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலிலுள்ள காளி மாதா ஆம்பேர் கோட்டையின் காவல் தெய்வமாகவும் பூஜிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி திருவிழா இந்த ஷீலா தேவி கோயிலில் வெகு சிறப்பாக வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications