கதீட்ரல் குன்குரி ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கத்தோலிக்க தேவாலயமாக புகழ் பெற்றுள்ளது. 1962ம் ஆண்டு துவங்கப்பட்ட இது 1979ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.
இரும்பு பட்டைகளால் நிர்மாணிக்கப்பட்டு வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த தேவாலய வளாகத்தில் ஏழு தொகுதிகள் மற்றும் அவற்றுக்கான ஏழு புனிதச்சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு மதங்களையும் சேர்ந்த யாத்ரீகர்கள் இந்த தேவாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications