சோக்கேலாவ் பாக் என்றழைக்கப்படும் இந்தப்பூங்காத்தோட்டம் மஹாராஜா அபய் சிங் அவர்களால் 1739ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மெஹ்ரான்கர் கோட்டையின் ஒரு அங்கமாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டம் கடந்த பத்து வருடங்களாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வெப்பமான கோடைக்காலத்தை தாக்குப்பிடித்து வாழும் இயல்புடைய பல அரிய தாவரங்கள் இங்கு தோட்டத்தில் உள்ளன.
மூன்று தளங்களாக பிரித்து அமைக்கப்பட்டுள்ள இந்த தோட்டம் ஒவ்வொரு பிரிவிலும் பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாழை, பாலைவன ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு மற்றும் மல்லிகை மரங்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் பயணிகள் ஓய்வெடுத்து ரசித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications