கைலானா ஏரி ஜெய்சல்மேர் சாலையில் அமைந்துள்ள ஒரு செயற்கை நீர்த்தேக்கமாகும். இது தன் அற்புதமான இயற்கை எழில் சூழலுக்காக ஒரு பிரபலமான சிற்றுலாத்தலமாக பெயர்பெற்று விளங்குகிறது.
இந்த ஏரியில் படகுச்சவாரி வசதிகளும் ராஜஸ்தான் மாநில சுற்றுலாக்கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏரியின் இன்னொரு பகுதியாக 10 கி.மீ தூரத்தில் தக்காட் சாகர் ஏரி என்ற ஏரியும் அமைந்துள்ளது. இது 19ம் நூற்றாண்டில் ஜோத்பூரை ஆண்ட தக்காத் சிங் எனும் மன்னரின் பெயரால் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications