Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோத்பூர் » ஈர்க்கும் இடங்கள் » உமைத் பவன் அரண்மனை

உமைத் பவன் அரண்மனை, ஜோத்பூர்

51

உமைத் பவன் அரண்மனையானது அதை உருவாக்கிய மஹாராஜா உமைத் சிங் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அழகிய அரண்மனை சித்தார் மலையின்மீது அமைந்திருப்பதால் சித்தார் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தோ-காலனிய கலை அம்சங்கள் மற்றும் ஆர்ட் டெகோ பாணிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இதன் அலங்கார நுணுக்கங்கள் காட்சியளிக்கின்றன. 1920 மற்றும் 1930 ஆண்டுகளில் துவங்கிய ஆர்ட் டெகோ எனும் கலைப்பாணி மிக கம்பீரமான அம்சங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றுடன் ஒன்று இறுக்கிக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டு துல்லியமாக அறுக்கப்பட்ட மணற்பாறைக் கற்களை கொண்டு இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்புக்கலவை பூசப்படாமலேயே இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

இந்த தனித்தன்மையா அதிசய கட்டிடக்கலை அம்சம் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. ஹென்றி வாஹான் எனும் ஆங்கிலேயேர் இந்த அரண்மனையின் வடிவமைப்பாளர் ஆவார். தற்சமயம் இந்த அரண்மனையின் ஒரு பகுதி பாரம்பரிய விடுதியாகவும் மற்றொரு பகுதி அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu