உமேத் கார்டன்ஸ் எனும் தோட்டங்கள் உமேத் சிங் எனும் மன்னரால் உருவாக்கப்பட்டதாகும். இது 82 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இங்கு பயணிகள் அசோகமரங்கள், புல்வெளிகள், நீரூற்றுகள், நூலகம் மற்றும் ஒரு வனவிலங்கு காட்சியகம் ஆகியவற்றைப்பார்க்கலாம்.
இந்தப்பூங்காவினுள் நுழைவதற்காக பல்வேறு திசைகளில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. அழகிய ரோஜா மலர்கள் மற்றும் குறிப்பிட்ட பருவத்தில் மலரும் மலர்கள் ஏராளம் இந்த தோட்டத்தில் காணப்படுவது பயணிகளைக்கவரும் ஒரு எழில் அம்சமாகும்.
வில்லிங்க்டன் எனும் ஆங்கிலேய வைசிராய் ஒருவரால் துவக்கி வைக்கப்பட்ட இங்குள்ள வனவிலங்கு காட்சியகத்தில் சிங்கங்கள்,புலிகள், வரிக்குதிரைகள், நரிகள், மான்கள், முயல்கள், புறாக்கள், முதலைகள், தீக்கோழிகள், ஈமு மற்றும் சிறுத்தைகள் காணப்படுகின்றன.
மேலும், இந்த வளாகத்தில் 1978ம் ஆண்டு கட்டப்பட்ட பறவைக்காட்சியகத்தில் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியக் கிளிகளைக்காணலாம்.



Click it and Unblock the Notifications