ஜோக் நீர்வீழ்ச்சியிலிருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் சாகர தாலுக்காவில் லிங்கனமக்கி அணை அமைந்துள்ளது. லிங்கனமக்கி அணையிலிருந்து காடுகள் சூழ அமைந்திருக்கும் தீவுகளையும், மலைச் சரிவுகளில் பச்சை பசேல் என்று காட்சி தரும் மரங்களின் அழகையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். ஆனால் புகைப் படம் எடுக்க அனுமதி கிடையாது.
மழைக் காலங்களில் இந்த அணையை சுற்றிப் பார்க்க வருவது சிறப்பாக இருக்கும். இந்த அணை 1964-ஆம் ஆண்டு கர்நாடகா அரசால் கட்டப்பட்டது.இரண்டரை அடி நீளம் கொண்ட லிங்கனமக்கி அணை 300 கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து கிடக்கிறது.ஷராவதி ஆற்றின் குறுக்கே கட்டபட்டிருக்கும் லிங்கனமக்கி அணை, மகாத்மா காந்தி நீர் மின்சார திட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. சக்ரா மற்றும் சவஹக்லு நீர்த்தேக்கங்கள் இந்த அணைக்கு மூலமாக இருந்து வருவதோடு, இது இரண்டும் லிங்கனமக்கி அணையுடன் ஒரு கால்வாய் வழியாக இணைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications