லசித் போர்புகான் என்ற மாவீரரின் நினைவாகவே பிரமிக்கத் தக்க வகையில் லசித் புகான் மைய்தாம் கட்டப்பட்டுள்ளது. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த இந்த லசித் போர்புகான் என்பவர் தான், வலிமை மிகு முகலாயப் படையினரைத் தோற்கடித்த மாவீரர் ஆவார்.
1672-ம் ஆண்டு சாராய்காட்டில் முகலாயர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்டு வெற்றி கண்டவர் தான் லசித் போர்புகான்! இந்த போர் முடிந்து, ஒரு ஆண்டு முடிந்தவுடன் இவர் மரணமடைந்ததையொட்டி இந்த மைய்தாம் கட்டப்பட்டது.
லசித் போர்புகானின் நினைவுகளை என்றென்றும் பாதுகாத்து வைத்திருக்கும் இந்த கல்லறையை ஸ்வர்கதியோ உதயாதித்யா போர்புகான் என்பவர் கட்டினார்.
மேலெங் ஹுலுங்காபாரில் உள்ள கோஹைன் கோன் என்ற இடத்தில் உள்ள இந்த மைய்தாம் கிப்பன் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த கல்லறைக்கு வரும் போது பெருமை மிகு அஹோம் ஆட்சியின் கீழ் மீண்டும் ஒரு பயணம் செய்வது போன்ற பிரமை ஏற்படும். வண்ணங்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கல்லறை அஹோம் ஆட்சியின் மிசக்சரியான நினைவகமாகும்.



Click it and Unblock the Notifications