ஜோர்கட் நகரத்தை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வைக்கும் அரணாக பிரதாப் சின்ஹா என்ற அரசரின் காலத்தில் லடாய் கார் கட்ட்டப்பட்டது. இது ஜோர்கட் நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த அரணில் மேரா கார், ஸ்வாலத் கார் மற்றும் லடாய் கார் ஆகிய மூன்று பகுதிகள், மூன்று வேறு வேறு திசைகளை பார்க்கும் வகையில் இந்த அரண் அமைக்கப்பட்டுள்ளது.
ஜோர்கட்டில் கண்டிப்பாக காண வேண்டிய மற்றும் மிகவும் கவர்ச்சியான சுற்றுலாத்தலமாக லடாய் கார் உள்ளது. மிகவும் சிதைந்த நிலையில் இந்த கோட்டை காணப்பட்டாலும், இந்த இடத்தின் பெருமையையும், ஆளுமையையும் இந்த அழிவுகளில் இன்றும் காண முடியும்.
லடாய் கார் பகுதிக்கு சென்று வர ஜோர்கட் நகரம் அல்லது கார் அலி ஆகிய இடங்களிலிருந்து டாக்ஸிகள் எளிதில் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications