முதல் அஸ்ஸாமிய செய்தித்தாள் வெளியிடப்பட்ட இடம் தான் தெங்கால் பவன். ஜோர்கட்டின் அண்டை நகரமாக திடாபோரில் உள்ள ஜலுகோனிபாரியில் தெங்கால் பவன் உள்ளது.
அஸ்ஸாமின் முதல் அஸ்ஸாமிய மொழி பத்திரிக்கையான தெங்கால் பவன், இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் வெளியிடப்பட்ட முதல் மண்டல அளவிலான செய்தித்தாளாகவும் உள்ளது.
1880-ம் ஆண்டில் ரெய்பகதூர் சிவ பிரசாத் பருவா என்பரால் தெங்கால் பவன் கட்டப்பட்டது. 1929-ம் ஆண்டில் பருவா வாராந்திர செய்திப் பத்திரிக்கைகளை வெளியிடத் தொடங்கினார்.
பின்னர், இதனை தினசரி பத்திரிக்கையாக மாற்றினார். இந்த செய்தித்தாளின் பெயர் 'டெய்னிக் படாரி' என்பதாகும். பருவா இதன் உரிமையாளராகவும், பகமிபார் நிலாமணி புகான் ஆசியராகவும் இருந்தனர்.
தெங்கால் பவனுக்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் திடாபோருக்கு டாக்ஸிகளில் செல்லலாம். திடாபோர் செல்வதற்கு பேருந்து வசதிகளும் உள்ளன. ஜோர்கட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ள திடாபோருக்கு சுமார் 30 நிமிடங்களில் சென்று விட முடியும்.



Click it and Unblock the Notifications