கடப்பா நகரில் கண்டிகொட்டா கோட்டைக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் அழகிய மசூதியான மஸ்ஜித்-இ-ஆஸாம் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மசூதி முகாலய பேரரசர் ஔரங்கஜீப்பால் கட்டப்பட்டதாக வரலாற்றியலாளர்கள் நம்பி வருகின்றனர். இதை உறுதி செய்யும் விதமாக இங்கு எண்ணற்ற பெர்சிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
கடப்பா நகரின் முக்கியமான மற்றும் புகழ்பெற்ற மசூதியாக திகழ்ந்து வரும் மஸ்ஜித்-இ-ஆஸாம் மசூதிக்கு தினமும் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகைக்காக வந்து செல்கின்றனர்.
இதன் சமய முக்கியத்துவத்தை தவிர பெர்சிய கட்டிடக் கலை பாதிப்பில் உருவான கட்டிடக் கலை சிறப்புக்காகவும் மஸ்ஜித்-இ-ஆஸாம் மசூதி பயணிகள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.
மேலும் வட இந்தியாவில் அன்றைய காலங்களில் ஔரங்கஜீப்பால் கட்டப்பட்ட மற்ற பிற மசூதிகளின் பாணியிலேயே இதுவும் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications