பரப்பளவை கொண்டு பார்த்தால், லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கம் ஒடிசாவில் இருக்கும் மிகப்பெரிய விளையாட்டரங்கமாகும். இங்கு ரஞ்சி ட்ராபி, காலாஹண்டி கோப்பை என இன்னும் பல பெரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
புகழ் பெற்ற காலாஹண்டி உத்சவ்வும் கூட ஒவ்வொரு வருடமும் இங்கே தான் கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த திருவிழா நான்கு நாட்களுக்கு நடைபெறும்.
உலகத்தில் பல பேரால் செய்யப்பட்ட மிக நுண்ணிய கலை சிற்பங்களும் கைவினை பொருட்களும் இங்கே காட்சியாக வைக்கப்படும். மேலும் பல கலை நிகழ்ச்சிகளும் கூட இந்நேரத்தில் இங்கு நடைபெறும்.
இது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக விளங்கும். ஜனவரி மாதம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காலாஹண்டி உட்சவ்வை கண்டு களிக்கலாம்.



Click it and Unblock the Notifications