மோஹன்கிரி என்ற கவர்ச்சிகரமான கிராமம் இங்குள்ள சிவன் கோவிலுக்காக சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்ப இடமாக உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் காளி கங்கா என்ற ஓடை ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஓடையின் கரையில் அழிந்த நிலையில் இருக்கும் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள ஜக்மோகன் ஹால் என்ற இடத்தில் 11 தூண்கள் உள்ளன.
இக்கோவில் புதுபிக்கபட்டாலும் கூட கி.பி.600-ல் கட்டப்பட்ட சில பகுதிகள் இன்னும் கூட அப்படியே இருக்கிறது. இந்த கோவிலில் பாறைகளில் செதுக்கிய சிற்பங்கள் பலவற்றை காணலாம்.
இதனுடன் சேர்த்து அக்காலத்தில் கட்டப்பட்ட எஞ்சியிருக்கும் கட்டடங்கள் இக்கோவிலை சுற்றிப் பார்க்கத் தூண்டும். இங்கு பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிவலிங்கம் இந்த கோவிலில் வைத்து இன்றும் கூட வழிப்பட்டு வருகிறது. இக்கோவில் தற்போதைய காலம் மற்றும் பழக்காலத்தின் கலவையாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications