Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» காலிம்பொங்

காலிம்பொங் - பனிச்சிகரங்களோடு பழகுவோம்!

17

தொடு வானத்தில் தெரியும் பனி மூடிய சிகரங்களை இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் வட பகுதியில் உள்ள இந்த அழகிய மலை வாசஸ்தலமான காலிம்பொங்கில் கண்டு மகிழலாம்.

காலிம்பொங் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள அழகிய இயற்கை காட்சிகள், சுத்தமான காற்று, மற்றும் இனிமையான வானிலை போன்றவை ஒரு இனிமையான சுற்றுலா அனுபவத்தை உங்களுக்கு வழங்குகின்றன. சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

சுறுக்கமாக சொல்வதென்றால் காலிம்பொங் இரு வேறு உலகங்களின் சிறந்த பகுதிகளை உங்களுக்கு வழங்குகின்றது. இங்கு நீங்கள் மேற்கு வங்காளத்தின் பாரம்பரியமான கலை, உணவு, மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை அனுபவித்து மகிழலாம்.

அதைத் தவிர இங்குள்ள புத்த மத செல்வாக்கானது, உங்களுக்கு இமயமலையின் மடியில் மஹாபாரத காலத்தின் நடுவில் வாழ்வது போன்ற உணர்வை வழங்குகின்றது.

காலிம்பொங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

காலிம்பொங்கிற்கு வரும் இயற்கை ஆர்வலர்களை இந்த நகரம் என்றுமே கைவிடுவதில்லை. இங்கு இருள்சூழ் சிறுத்தை, சிவப்பு பாண்டா, குரைக்கும் மான், மற்றும் சைபீரிய மரநாய் போன்ற அரிய வகை இனங்கள் உள்ளன.

இந்த நகரத்தை சுற்றி பலவகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. நீங்கள் உங்களுடைய மன அமைதியை இழந்து இருந்தால் இங்குள்ள நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, மற்றும் ரிஷி பக்கிம் சந்திர பார்க் போன்றவற்றில் உங்களுடைய விடுமுறையை இயற்கையின் மடியில் அனுபவித்து மகிழலாம்.

இங்கு உள்ள பகுதிகளில் பைன் மரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதன் காரணமாக காலிம்பொங் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கிருந்து உலகம் முழுவதற்கும் பல்வேறு வகையான மல்லிகை மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆகவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய பெண் தோழிக்கோ அல்லது மனைவிக்கோ மல்லிகை மலர்களை வாங்கிக் கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தலாம்.

கலாச்சாரத்தில் ஆர்வமுடைய அன்பர்கள் இங்குள்ள லெப்சா அருங்காட்சியகம் அல்லது ஜாங்க் டொக் பல்ரி ப்ஹொடாங்க் மடாலயத்திற்கு விஜயம் செய்யலாம். இந்த இரண்டு இடங்களும் நகர மையத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளன.

உங்களுக்கு எந்த விதமான சுற்றுலா பிடிக்கும் என்றாலும், காலிம்பொங் அனைவருடைய சுற்றுலா தேவைகளையும் தீர்த்து வைக்கின்றது. இந்த நகரத்தை எளிதில் அணுக முடியும் ஏனெனில் இது சிலிகுரி விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது.

மேலும் இந்த நகரத்திற்கு சாலை மூலம் செல்லும் பயணிகள் இங்குள்ள அழகிய இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்ல முடியும். மேலும் காலிம்பொங்கில் தகவல் தொடர்பு ஒரு பிரச்சனையாக இல்லை.

ஏனெனில் இங்கு ஏராளமான பிராட்பேண்ட் இன்டர்நெட் கஃபேக்கள் இருப்பதுடன், நகரில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களின் அறைகளில் அதிவேக இண்டர்நெட் சேவை இணைப்புகள் உள்ளன.

காலிம்பொங் வானிலை

கோடை மற்றும் வசந்தகாலங்களே காலிம்பொங்கை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும். இந்த பருவத்தில் ஏராளமான உள்ளூர் மக்களுக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

காலிம்பொங் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான வணிகத்தில் ஒரு முக்கிய கேந்திரமாக செயல்படுகிறது. மேலும் இது  இந்தியா மற்றும் சீன வர்த்தகத்தின் மிக முக்கிய சக்தியாக மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

காலிம்பொங் இந்தப் பகுதியின் ஒரு முக்கிய கல்வி கேந்திரமாக விளங்குகிறாது. சமவெளியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் கல்விக்காக காலிம்பொங் பகுதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

காலிம்பொங்கின் பருவகால மாற்றங்கள் மென்மையாக மற்றும் இயல்பாக நடைபெறுகின்றன. இங்கு கோடை மற்றும் குளிர் காலங்களின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை காலிம்பொங்கை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது.

இங்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் ஒருவர் மழைக்காலத்தில் ஏற்படும் நிலச்சரிவு அச்சுறுத்தலை மனதில் கொண்டு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது.

காலிம்பொங்கில் உள்ள உள்ளூர் மக்களில் பெரும்பாலானவர் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் வேலை தேடி இந்தப் பகுதியில் குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள்.

இங்குள்ள மக்கள் திறந்த மனதோடு, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் திகழ்கின்றார்கள். மேலும் அவர்களால் தீபாவளி, தசரா மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மிகவும் ஆடம்பரமாக இங்கு கொண்டாடப்படுகின்றன.

காலிம்பொங்கின் மக்கள் பல்வேறு இனங்களால் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் மிகச் சிறந்த இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இங்குள்ள லெப்சா அருங்காட்சியகம் மற்றும் ஜாங்க் டொக் பல்ரி ப்ஹொடாங்க் கோவில் போன்றவை பெரிதும் ஈர்க்கின்றன.

காலிம்பொங்  உணவு

உணவு வகைகளைப் பொருத்த வரை ஒருவர் இங்கு கிடைக்கும் பல்வேறு வகையான மொமொக்களை (சுசியம் போன்ற பண்டம்) ருசி பார்க்காமல் இருக்க முடியாது.

குறிப்பாக கோழி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது காய்கறி வைத்து சமைத்து தெருக்களில் பறிமாறப்படும் மொமொக்களின் சுவையில் இருந்து தப்பிக்க முடியாது.

ட்ஹுக்ப எனப்படும் நூடுல்ஸை அடிப்படையாகக் கொண்ட உணவு குளிர்காலத்தின் பிற்பகல் வேளைக்கு சுவையானதாக இருக்கிறது. ச்ஹுர்பீ எனப்படும் ஒரு வகையான சீஸ்களை கடைகளில் வாங்கிச் செல்லலாம்.

இந்த சீஸ் இங்குள்ள யாக்கின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.  இந்த பாரம்பரியமான உணவுகளை ஒரு கோப்பை டார்ஜலிங் தேநீருடன் பருகுவது உண்மையிலேயே ஒரு நல்ல அனுபவம் ஆகும்.

காலிம்பொங்  கோல்ஃப்  

கோல்ஃப் விளையாட்டு ஆர்வலர்களுக்கு தேவைப்படும் கோல்ஃப் மைதானம் இங்குள்ளது. இங்குள்ள மைதானமானது 18 துளைகள் கொண்ட ஒரு முழுமையான மைதானம் ஆகும்.

கோல்ப் விளையாட்டு விமர்சகர்கள் இங்குள்ள மைதானத்தை உலகில் உள்ள சிறந்த மைதானங்களில் ஒன்றாக தெரிவிக்கின்றனர். இந்த மைதானம் இந்திய இராணுவத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

காலிம்பொங் சிறப்பு

காலிம்பொங் வானிலை

சிறந்த காலநிலை காலிம்பொங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது காலிம்பொங்

  • சாலை வழியாக
    காலிம்பொங்கை சிலிகுரியில் இருந்து மாநில நெடுஞ்சாலை 31 ஐ பயன்படுத்தி அடையலாம். இந்த பயணத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் பிடிக்கும். டாக்சிகள் சிலிகுரி விமான நிலையத்தில் இருந்து எளிதாகக் கிடைக்கும் அல்லது சிலிகிரியில் வாடகைக் கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    காலிம்பொங்கிற்கு அருகில் சிலிகுரி மற்றும் ஜல்பைகுரி ரயில் நிலையங்கள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    காலிம்பொங்கிற்கு அருகில் சிலிகுரி மற்றும் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat