கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்திலிருக்கும் சாகா இந்த பகுதியனி; முதன்மையான மலை சிகரமாகும். இந்த பகுதியின் பிரபல மலையேற்ற பகுதியாக இருக்கும் சாகா சிகரத்தில் ஏறுவதற்கு 2 முதல் 3 மணி நேரமும் மற்றும் இறங்குவதற்கு 2 மணி நேரமும் மட்டுமே ஆகும்.
கல்பாவில் உள்ள நீர்நிலைகளையொட்டிய பாதைகளின் வழியாக மலையேற்றம் செய்வதற்கு தகுந்த திறமையான வழிகாட்டிகளை சுற்றுலாப்பயணிகள் அமர்த்திக் கொள்ளவும் முடியும்.
காலையில் நேரமாக மலையேறத் துவங்கினால் இந்த பகுதியின் இயற்கையழகை நன்றாக பருக முடியும். பகல் நேரத்தில் மலையேறிக் கொண்டிருக்கும் போது சுற்றுலாப்பயணிகள், சாகா மற்றும் கல்பா பகுதிகளில் மேய்ச்சல் நலமாக பயன்படுத்தப்படும் ஏரியையும், அழகிய பள்ளத்தாக்கையும் பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications