சாப்னி கிராமத்திற்கு அருகில் உள்ள கலைத்திறன் மிக்க இடம்தான் சாப்னி கோட்டை. இந்த கோட்டையானது, இரண்டு கட்டிடங்களை இணைப்பதன் மூலமாக கட்டப்பட்ட கோட்டையாகும்.
சற்று பழமையானதாக காட்சியளிக்கும் முதன்மை கோபுரம் ஏழு அடுக்குகளை உடையதாகும். இந்து கடவுளான காளி தேவியின் கோவில் ஒன்று இந்த கோபுரத்தின் 5வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டையின் முகப்பு பகுதி ராம்பூரைச் சேர்ந்த அரசர் ராஜா பதம் சிங்கினால் கட்டப்பட்டது. இந்த கோட்டையின் ஜன்னல்கள் மற்றும் கதவு சட்டங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறந்த விருந்தாக அமையும்.



Click it and Unblock the Notifications