கல்பெட்டா நகருக்கு தென்கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் கந்தன்பாறை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பசுமையான தேயிலை தோட்டங்கள் சூழ 30 மீட்டர் உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகை நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
கந்தன்பாறை அருவயை நோக்கி ஹைக்கிங் செல்லும் போது அமைதியான சுற்றுப்புறமும், காற்றில் மிதந்து வரும் தேயிலை மணமும் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.
அதோடு இந்த அருவி அற்புதமான பிக்னிக் தலமாக விளங்கி வருவதுடன், டிரெக்கிங் மற்றும் முகாமிட்டு தங்குவதற்கு மிகவும் ஏற்ற இடமாகவும் திகழ்ந்து வருகிறது. ஆனால் நீங்கள் டிரெக்கிங் செல்ல விரும்பினால் கண்டிப்பாக உங்களுக்கு பயண வழிகாட்டி ஒருவரின் உதவி அவசியம்.



Click it and Unblock the Notifications