செயின்ட் டோமினிக்ஸ் கத்தீட்ரல் முதன்முதலில் 1826-ஆம் ஆண்டு தேவாலயமாக கட்டப்பட்டது. அதன் பிறகு 1945-ஆம் இதன் புனரமைப்பு பணிகள் தொடங்கி 1961-ல் முடிவடைந்தது.
1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி இதன் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட பின்னர்தான் இந்த தேவாலயம் கத்தீட்ரலாக அறிவிக்கப்பட்டது.
செயின்ட் டோமினிக்ஸ் கத்தீட்ரல் வயம்பு புரயிடத்தில், சிட்டார் நதிக்கரையில் காண்போரை சொக்க வைத்திடும் தோற்றத்துடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கத்தீட்ரல் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications