கிறிஸ்டியன் சிமெட்டரி எனப்படும் இந்த கல்லறை வளாகம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது ஆங்கிலேய அதிகாரிகள், தளபதிகள், வீரர்கள் போன்றோரை அடக்கம் செய்வதற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1808ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்லறை வளாகம் நாட்டிலுள்ள பழமையான ஆங்கிலேய கல்லறைகளுள் ஒன்றாகும்.
செயிண்ட் ஜேம்ஸ் தேவாலய கோபுரத்திற்கு அருகில் இந்த கல்லறை வளாகம் அமைந்திருந்தது. பின்னர் இந்த தேவாலயம் இடம் பெயர்க்கப்பட்டு அம்பாலாவிற்கு மாற்றப்பட்டுவிட்டது.
தற்போது அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு அருகில் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பிளாட் எண் 28ல் இந்த கல்லறை வளாகத்தை காணலாம்.
50 ஆங்கிலேய ஆண்கள் மற்றும் பெண்களின் சமாதிகள் இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கேப்டன் ராபர்ட் மோரிஸ் பக்ஷா, ஜெனரல் பனோமன், 9ம் ரெஜிமண்ட் டிரம் மேஜர், ஜெனரல் அன்சன், கர்னல் ஹாலிஃபாக்ஸ் ஆகியோரது சமாதிகள் குறிப்பிடத்தக்கவை.
1875ம் ஆண்டில் இந்த கல்லறை வளாகத்தை சுற்றிலும் ஒரு செங்கல் சுவர் அமைப்பும் எழுப்பப்பட்டது. ஹரியானா அரசாங்கம் இந்த கல்லறை வளாகத்தை ஒரு வரலாற்றுச்சின்னமாக அறிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications