துர்க்கா மாதா அல்லது துர்க்கா பவானி கோயில் என்று அறியப்படும் இந்த கோயில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள லட்சக்கணக்கான இந்து பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. உலகிலுள்ள உயிர்களை எல்லாம் காக்கும் தெய்வமாக இந்த துர்க்கா பவானி தெய்வத்தை அதன் பக்தர்கள் கருதுகின்றனர்.
சிவனின் மனைவியான இந்த துர்க்கையம்மன் தீய சக்திகளை அழிப்பதில் அவருக்கு உதவுவதாக ஐதீக நம்பிக்கை. யார் தலையில் கை வைத்தாலும் அவர்களுக்கு மரணம் நேர வேண்டும் எனும் கொடிய வரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றுக்கொண்ட மகிஷாசுரனை வெல்ல முடியாமல் தேவர்கள் தவித்தபோது அவர்களுக்கு இந்த துர்க்கா தெய்வமே உதவியுள்ளது.
ஒரு அழகிய பெண் நர்த்தகி ரூபமெடுத்து மகிஷாசுரனை மயக்கியபின் அவன் தன் தலையிலேயே கை வைத்து இறந்து போகும்படி இந்த துர்க்கா மாதா செய்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.
தனது தாயை சந்திப்பதற்காக ஒன்பது நாள் பூமிக்கு விஜயம் செய்து பத்தாவது நாளில் புறப்படுவதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. இதனை மையமாக வைத்தே ஒன்பது நாள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வரலாற்றுப்பிரசித்தி உடைய இந்த துர்க்கா பவானி கோயில் கர்ணால் நகரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட பழமையை உடைய கோயிலாக கருதப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications