Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள் » கலந்தர் ஷா கல்லறை

கலந்தர் ஷா கல்லறை, கர்ணால்

27

இந்த கலந்தர் ஷா கல்லறை சுஃபி ஞானியான ‘போ அலி குவாலந்தர் ஷா’ என்பவருக்காக டெல்லியை ஆண்ட கியாசுதீன் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. இது கர்ணால் நகரத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.

அக்காலத்தில் எல்லா மதத்தினராலும் மதிக்கப்பட்ட ஞானியாக இந்த சூஃபி ஞானி விளங்கியுள்ளார்.  அவரது வாழ்க்கை, போதனைகள் மற்றும் அற்புதச்செயல்கள் போன்றவை மக்கள் மத்தியில் பிரபல்யமாக அறியப்பட்டிருக்கின்றன.  

பானிபட் நகரத்திற்கு அருகிலிருந்த புத்த கேரா எனும் இடத்தில் இந்த போ அலி குவாலந்தர் ஷா  பிறந்துள்ளார். இவர் பற்றி சொல்லப்படும் கதைகளின்படி, ஒரு புலியை வளர்ப்பு மிருகமாக வளர்த்து வந்த ஃபக்கிர் ஒருவர் இந்த சூபி ஞானியை தனது அற்புத சக்திகளால் மிரள வைக்கும் நோக்கத்துடன் அணுகியுள்ளார். ஆனால் இவரோ ஒரு பசுவை வரவைத்து அந்த புலியை தின்ன வைத்துவிட்டார்.

இது போன்ற அனேக கதைகள் இவரது அதிசய சக்திகள் பற்றி கூறப்பட்டு வருகின்றன. இவர் 724 வது ஹிஜிரி ஆண்டில் இறந்துள்ளார். அவருக்கான கல்லறை சின்னங்கள் அவரது பிறந்த ஊரான புத்த கேரா, பானிபட் மற்றும் கர்ணால் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சுவரால் சூழப்பட்டுள்ள இந்த கர்ணால் கலந்தர் ஷா கல்லறை வளாகத்தில் ஒரு மசூதி மற்றும் நீரூற்றுகள் போன்றவை காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu