மஹாபாரத காவியத்தின் முக்கிய பாத்திரமான கர்ணனின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஏரி கர்ணால் நகர மையப்பகுதியிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இந்நகரமே கர்ணனின் பெயரால் அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்ணன் இந்த ஏரியில் தினமும் நீராடும் வழக்கத்தை கொண்டிருந்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. தனக்கு எதிரியாக கருதப்பட்ட அர்ஜுனனின் தந்தையான இந்திரனுக்கு தனது கவச குண்டலங்களை இந்த இடத்தில் கர்ணன் தானமாக வழங்கியதாக சொல்லப்படுகிறது.
கர்ணா ஏரி கர்ணால் நகரத்தில் மட்டுமல்லாமல் ஹரியானா மாவட்டம் முழுதுமே பிரசித்தி பெற்ற பிக்னிக் ஸ்தலமாக அறியப்படுகிறது. NH 1 எனப்படும் கிராண்ட் டிரங்க் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளதால் இவ்வழியே செல்லும் கார்கள் மற்றும் ஹரியானா மாநில சுற்றுலாத்துறையின் வால்வோ சொகுசு பேருந்துகள் போன்ற யாவும் இங்கு நின்று விட்டே செல்கின்றன.
எனவே இந்தப்பகுதி எப்போதுமே சந்தடி நிறைந்த ஸ்தலமாக காட்சியளிக்கிறது. மரங்கள் பின்னணியில் ரம்மியமாக அணிவகுத்திருக்கும் சூழலின் நடுவே தோட்ட அலங்காரங்கள் கொண்ட உணவகங்களும் நிரம்பியுள்ளன.
அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் பிக்னிக் சுற்றுலாவுக்காக இந்த ஏரிக்கரைக்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications