Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள் » நரய்னா

நரய்னா, கர்ணால்

27

கர்ணால் நகரத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் அதன் துணை நகரமான ‘தரோவரி’ எனும் நகரத்திலிருந்து  5 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ‘நரய்னா’ எனும் இடம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இந்த ஸ்தலத்தில்தான் 1191ம் ஆண்டு பிரித்வி ராஜ் சௌஹான் எனும் டெல்லி மன்னர் ஷகாபுதின் முகமது கோரி எனும் ஆப்கன் மன்னரின் ஊடுறுவலை தோற்கடித்தார்.

இருப்பினும் முகமது கோரி அதற்கு அடுத்த வருடமே மீண்டும் படையெடுத்து வந்தார். அப்போரில் அவர் ராஜபுதன வீரர்களுடன் சமாதானம் செய்துகொள்வதுபோல் ஒரு மாயையை உருவாக்கி அவர்களை முதலில் அமைதிப்படுத்தினார்.

பின்னர் அவர்களது போர்முறை பழக்க வழக்கங்களை சாதகமாக்கிக்கொண்டு ஒரு யுத்த தந்திரத்தின்மூலம் அவர்களை வீழ்த்திவிட்டார்.

அதாவது ராஜபுத்திர வீரர்கள் காலை 3 மணிக்கே எழுந்து காலைக்கடன்கள் குளியல்கள் போன்றவற்றை முடித்து உணவுண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தனர். பின்னர் சூரிய உதயத்திற்கு முன்பே ஆயுதங்களோடு எதிரிகளுடன் போரிடத்துவங்கும் வழக்கத்தை அவர்கள் பயன்படுத்தினர்.

இந்த வழக்கத்தை நன்கு கவனித்து புரிந்துகொண்ட முகமது கோரி ஒரு அதிகாலையில் ராஜபுதன வீரர்கள் காலைக்கடன்களை முடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது அதிரடியாக போர்த்தாக்குதலை நிகழ்த்த வைத்தார்.

ஆயுதங்கள் அற்ற ஒரு பலவீன தருணத்தில் எதிர்பாராத தாக்குதல் மூலமாக ராஜபுதன வீரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அந்த கணத்திலிருந்து இந்தியாவின் வரலாற்றுப்புத்தகத்தில் புதிய அத்தியாயம் துவங்கியது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri