நேரம் இருந்தால் சுற்றுலாப்பயணிகள் கார்வாருக்கு அருகிலுள்ள கடற்கரை கிராமமான பைத்கோல்’க்கு சென்று வரலாம். இந்த பெயர் ‘பைத்-எல்-கோல்’ எனும் அரபி வார்த்தையிலிருந்து பிறந்துள்ளது. பாதுகாப்பான கடற்கரை என்பது அந்த வார்த்தைக்கு பொருள்.
இங்குள்ள கத்தோலிக் கல்லறைகள், பிரிட்டிஷ் கல்லறைகள் மற்றும் பைத்கோல் கோவ் (வளைகுடா) போன்றவை இந்த கிராமத்தின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.
இந்த கிராமத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிற்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காக வருகை தந்த ஐரோப்பியர்களின் கல்லறைகளை பார்க்கலாம். உலகின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக கருதப்பட்ட கார்வார் துறைமுகம் இந்த கிராமப்பகுதியில் உள்ளது.



Click it and Unblock the Notifications