சதாசிவகாட் மலைக்கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலாகும். கார்வாரில் இது முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் காளி ஆற்றின் வட கரையில் இந்த சதாசிவகாட் அமைந்துள்ளது. உள்ளூர் கதைகளின் படி ராஜா சிவ சத்ரபதி இந்த கோயிலை கண்டறிந்ததாகவும் உள்ளூர் மக்களாகிய பண்டாரி சமூகத்தை இந்த கோயிலில் வழிபாடு செய்வதற்கு அவர் அனுமதித்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் பயணிகள் சொண்டா அரசர்களின் பெருமைக்குரிய சின்னமாக விளங்கும் பழைய கோட்டையையும் பார்த்து ரசிக்கலாம்.
சாந்ததுர்கா கோயில் என்ற மற்றொரு பெயரையும் கொண்ட இந்த துர்கா கோயில் 17 ம் நூற்றாண்டைச்சேர்ந்த ‘பீர் ஷான் ஷம்சுதீன் கரோபாட்’ தர்க்காவிற்கு எதிரில் உள்ளது. பயணிகள் தங்கும் வசதிக்காக இந்திய சுற்றுலாத்துறை யாத்ரி நிவாஸ் எனும் விடுதியை இந்த சதாசிவகாட் மலைமேல் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications