காளி ஆற்றின் குறுக்கே 1986 ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை NH17 ன் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் கார்வாருக்கு சற்று வெளியே உள்ளது. கர்நாடகாவை கோவாவுடன் இணைக்கும் இந்த பாலம் மாநிலத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒரு பெருமையான அடையாளமாக திகழ்கிறது.
கார்வாருக்கு வருகை தரும் பயணிகள் இந்த பாலத்துக்கு வந்து இங்கிருந்து தெரியும் கார்வார் கடற்கரை, சதாஷிவ்காட் கோட்டை, மலைகள், சூரிய அஸ்தமனம், சூரிய உதயம் , ஆறு, கடல், அருகிலுள்ள தீவுகள் என்று அனைத்து சுற்றுப்புற காட்சிகளையும் கண்களால் அள்ளிப்பருகலாம்.
மேலும் இங்கிருந்து பார்க்கும்போது காளி ஆறு கடலில் கலக்கும் இடத்தின் அழகு சொல்ல முடியாத கவர்ச்சியுடன் மிளிர்கிறது.



Click it and Unblock the Notifications